அன்று ஒரு அழகிய காலை பொழுது, விடுமுறை முடிந்தது பள்ளிக்கூடம் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தால் கவி. கவி ஒரு சுட்டி பெண் அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவள், வாயாடி, அழகும் அறிவும் நிறைந்த அம்சமான பெண். அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு என்னோட பாக் எங்க? என்னோட யூனிபோர்ம் எங்கன்னு வீட்டையே ரெண்டாகிடு இருக்க, கவியின் அம்மா அமைதியாக அனைத்தையும் எடுத்து குடுக்க அவளும் பள்ளிக்கு கிளம்பினாள். போய்ட்டு வரம்மா, அப்பா போலாமா டைம் ஆச்சு.. நான் ரெடி டா செல்லம் வா போலாம்னு ரெடி ஆக இருந்தாரு கவி ஓட அப்பா கருணாகரன். இருவரும் கவியின் அம்மா கல்யாணிக்கு பாய் சொல்லி கிளம்பினார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் அப்பாவோடு அரட்டை அடித்துகொண்டே சென்றால் கவி. நடு வழியில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் வர, அப்பா அப்பா ஒரு நிமிஷம் என்னோட விக்கி வந்துட்டான்னு சொல்லி ஒரு ஸலாம் போட்டுட்டு கிளம்பினாள். அப்பா உங்களுக்கு தெரியுமா இந்த விக்கி...