Thalattu song in tamil - தாலாட்டு கவிதை


ஆரி ஆராரோ ஆரி ஆராரோ 
கண்ணுறங்கு கண்ணுறங்கு 
கண்மணியே கண்ணுறங்கு !

அம்மாவின் அன்பினிலே 
அசதி தீர கண்ணுறங்கு !

அப்பாவின் அரவணைப்பில் 
அழகாக கண்ணுறங்கு !

கண்ணுறங்கு கண்ணுறங்கு 
கண்மணியே கண்ணுறங்கு !!

தாத்தாவின் தோளினிலே 
தயக்கமின்றி கண்ணுறங்கு !

பாட்டியின் பாசத்திலே 
பக்குவமாய் கண்ணுறங்கு !

கண்ணுறங்கு கண்ணுறங்கு 
கண்மணியே கண்ணுறங்கு !!

மாமாவின் மார்பினிலே 
மயங்கி கண்ணுறங்கு !

அத்தையின் அன்பினிலே 
அழகாக கண்ணுறங்கு !

கண்ணுறங்கு கண்ணுறங்கு 
கண்மணியே கண்ணுறங்கு !!

சித்தப்பவின் அன்பினிலே 
சிறப்பாக கண்ணுறங்கு !

சித்தியின் பாசத்திலே 
சீர்பெறுக கண்ணுறங்கு !

கண்ணுறங்கு கண்ணுறங்கு 
கண்மணியே கண்ணுறங்கு !!

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை