Tamil kavithai for one side love - தூது

நான் உன் மீது கொண்ட காதலையும்,
உன்னை சேர நான் கொண்ட ஆவலையும்
காற்றாய் தூது செய்தேன்!
அது உன் அன்பின் மென்மை கண்டு சொல்லாமல் கரைந்தது !!

கடலை தூது செய்தேன் !
அது உன் ஆர்ப்பரிக்கும் மனதையும்,
அதில் நீ கொண்ட காதலின் ஆழத்தையும் கண்டு
காணாமல் போனது !!

மேகத்தை தூது செய்தேன்,
அது உன் பாசத்தின் தூய்மை கண்டு
மழையாய் பெய்து போனது !!

பூமி பெண்ணவளை தூது செய்தேன்
உன் பொறுமை கண்டு
பிரமித்து போனால் அவள் !!

தூது செய்ய வேறேதும் இன்றி
என் உயிரை தூது செய்தேன் அதுவோ
உன் உயிராய் ஆனதடா என் அன்பே!!!

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை