Tamil kavithai about mother's love in tamil - அம்மா
மணவாளன் கை கோர்த்து
மசக்கை தான் அடைந்து
மாதங்கள் பத்து தவமாய் நீ இருந்து
மழலையாய் என்னை பெற்றாய் !!
கையில் வைத்திருந்தால் கை சூடு ஆயிடுமோ
தரையில் வைத்தால் தவறி விடலாகிடுமோ
மடியில் வைத்தால் மகளின் முகம் வாடிடுமோ
என்று,
நெஞ்சில் என்னை சுமந்தாய் !!
மனதில் பட்டதை நீ சுவைத்தால்
மாந்தம் எனக்கு வருமென்று
பத்தியம் நீ இருந்து
பக்குவமாய் என்னை வளர்த்தாய் !!
பள்ளிக்கு நான் சென்று
பட்டங்கள் வாங்கிடவே
பக்க துணையாக நின்றாய்!!
பாராட்டுகள் நான் பெறவே
பக்கத்தில் ஒதுங்கி நின்று
பரவசம் தான் அடைந்தாய் !!
அனுதினமும் என்னை நினைத்து
ஆளாக்கிய உன்னை சொல்ல
இக்கவிதை போதிடுமா?
ஒரு ஜென்மம் ஆனா போதும்
உன் கடனை தீர்த்திடலாகுமா?
என்றும் உன் அன்பில் உன் மகள் 🙏
Chance ae illa
ReplyDelete🙏🙏
DeleteAnni nice one
ReplyDeleteThank you 😊
ReplyDelete