Tamil kavithai about girl child abuse in tamil - தாயின் கதறல்
பெற்று வளர்த்த என் பெண்ணை
பெருங்குழியில் தள்ளி போனானே!சீர் மிகுந்த என் கண்ணை
சீரழிச்சு போனானே !
பிஞ்சுக்குழந்தை அவளை
பிச்செறிஞ்சு போனானே !
அவனை பெற்ற தாயும்
பெண் தானே!
அவனோடு பிறந்த அவன் தங்கை பெண் தானே !
அது அறிந்தும் எது அவனை தூண்டியதோ??
பிஞ்சின் முகம் கண்டு
மோகம் தான் வந்திடுமோ??
குழந்தை சிரிப்பினிலே
சிந்தை தான் தடுமாறிடுமோ??
இதைக்கண்டும்
வாராத கடவுளும் கல் தானோ?
காலமோ, காமமோ இல்லை
கயவனின் கடுஞ்செயலோ,
கண்மணி உன் உயிரை வாங்கியதே !
கலங்காமல் நீ சென்று
கடவுளிடம் கேட்டு வா
உனக்கான நீதியை !!!!
Nice <3
ReplyDeleteThank you !
DeleteWonderfull lines..
ReplyDeleteThank you !
DeleteSuperb siva. Nice lines.
ReplyDeleteThank you!
Delete