Birthday kavithai in tamil - பிறந்தநாள் வாழ்த்து


தாய்மையின் இலக்கணத்தை 
உன் தாய்க்கு பரிசளித்த நாளிது, 
தன்னோடு மகிழ்ந்தாட தலைமகள் பிறந்ததாய்
உன் தந்தை கொண்டாடிய நாளிது, 

தேனினும் இனிய தேன்மொழியால் - நீ 
தேடி வந்த நாளிது, 
பூவினும் மெல்லிய பூமகள் - நீ  
பூமிக்கு வந்த நாளிது, 

கொண்டாடி மகிழ கோடி காரணம் இருந்த போதும்
இந்நாளின் கொண்டாட்டம் போல் வருமோ? 

பெற்றோரின் பிரியத்தோடு 
கொண்டவனின் காதலோடு 
இனிய தருணங்கள் இன்றே உன்னை அடைய 

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!"


Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை