Motivational tamil kavithai - நட்பே


நட்பே!

அன்பை நீ அளித்தால் 
ஆனந்தம் உன்னை அடையும் !
இனிமையாய்  நீ பேச 
ஈரேழுலகமும்  அடி பணியும் !
உலகமே உன் கலமாக்கி 
ஊக்கத்தோடு நீ உழைத்தால், 
எண்ணியது கைகூடும் 
ஏற்றமான வாழ்வமையும் 
ஐஸ்வர்யம் வந்தடையும் !
ஒற்றுமையின் வலிமையை 
ஓங்கி நீ உரைக்க 
ஔவியம்  பேசுவோர்  இவ்வுலகில்லை
அஃதே மனதில் கொள் !!

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை