Tamil love story - கவியும் காதலும் part 2

    நாட்களும் நகர கவியும் பள்ளி படிப்பை முடித்தால்.  கல்லுரி தேர்ந்தெடுக்க சென்னை செல்ல தன் அப்பா ஓடு ரெடி ஆகிக்கொண்டு இருந்தால் கவி. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக கவி தன் அப்பா ஓடு ரயில் நிலையம் அடைந்தாள். தன் பையில் இருந்து செல்போனெய் கையில் எடுத்து தனக்கு வந்த குறுஞ்செய்திகலை படித்துக்கொண்டு இருந்தால் கவி. அப்போது கருணாகரன் யாரோடு அளவலாடுவதை உணர்ந்தாள் கவி இருந்தும் தன் நண்பர்களோடு செல்போனில் பேசி கொண்டுருந்த ஆர்வத்தில் யார் என்று பார்க்க விரும்பாதவளாய் நின்றிருந்தாள் கவி. அப்போது ஒரு குரல்,
"என்னமா கவி எப்படி இருக்க?  என்ன தெரியுதா? "
சட்டென்று திரும்பி பார்த்தால் கவி ஆனால் யார் என்று தெரியாததால் ஒரு குழப்பத்திலேயே பதில் சொன்னால் கவி,
" நல்லா இருக்கேன் அங்கிள்,  சாரி உங்கள எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு ஆன சரியா தெரியல " என்று சொல்லி ஒரு அசட்டு சிரிப்போடு கருணாகரனை பார்த்தால் கவி. தன் மகளின் பார்வையை புரிந்து கொண்ட கருணாகரன் சட்டென்று, " இவர தெரியலையா இவர் தான் உன்னோட மாமா குமரேசன், இது அவர் பையன் கார்த்தி" என்று அறிமுக படுத்தினார். தன் நினைவுகளை தேடி எடுத்தவளாய் கவி " ஓ குமரேசன் மாமாவா பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல அத ஞாபகம் வரல சாரி மாமா,  எப்படி இருக்கீங்க? " என்று அன்பு கலந்த மரியாதையோடு கேட்டால் கவி.
"நல்லா இருக்கேன் டா,  எந்த காலேஜ் எடுக்கலாம்னு இருக்க கவி "
" எதுவும் முடிவு பன்னல மாமா போய் தா பாக்கணும் ஆன கம்ப்யூட்டர் சயின்ஸ் தானு முடிவுபன்னிருக்கே"
"நல்லது மா இவனையும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தா எடுக்க சொன்ன கேக்காம சிவில் எடுத்துட்டு வந்துட்டா " என்று அருகில் இருந்த கார்த்தியை கை காட்டினார் குமரேசன். அது வரை கார்த்தி மேல் போகத கண்கள் அப்போது தான் அருகில் ஒரு ஜீவன் இருப்பதை உணர்ந்தாள் கவி. பார்த்த உடனே பிடிக்கும் கவர்ச்சிகரமான முகம், அரும்பு மாதிறி சின்ன மீசை, கத்தி போல் கூர்மையான கண்கள், வாட்ட சாட்டமாய் ஆண்மை பொங்க நின்றிருந்தான் கார்த்தி. பேருக்கு ஒரு ஹலோ! சொன்னால் கவி. ஒரு சின்ன புன்னகை ஓடு "ஹாய் கவி! " என்றான் கார்த்தி. கருணாகரன் குமரேசனிடம்,  "குமரேசா கார்த்தி எங்க படிக்குறாப்புல? " என்று கேக்க, சிறிதும் தாமதிக்காமல்,  " சென்னையிலத மாமா நீங்க கவுன்சிலிங் வர காலேஜ் தான் " என்று சொல்ல "சூப்பர் மாப்புள அப்போ எங்கள நீங்களே கவனிச்சு எல்லம் பாத்து அனுப்பிடுவீங்க " என்று சிரிக்க " அதுக்கு என்ன மாமா நல்லபண்ணிடலாம் "  என்றான் கார்த்தி.
  இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும் போதே ரயில் அதுக்குரிய பாணியில் ஆடி ஆடி ப்லாட்போர்ம்க்கு வந்து சேர்ந்தது. குமரேசன் மூவருக்கும் பாய் சொல்லி சென்றார். ரயிலில் ஏறியதும், கார்த்தி கவியை பார்த்து " சீட் நம்பர் என்ன? " என்றான்.  கவி  மொபைலை பார்த்து "14, 19  ரெண்டுமே  அப்பர் பர்த் அப்பாவால ஏற முடியாது யாராச்சும் மாதிப்பங்களா? "  என்றால். கார்த்தி " ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல என்னோடது 17 கீழ தான்,  சோ மாமா நீங்க இங்க படுத்துகோங்க நா மேல போய்க்கிறேன்" என்று சொல்ல,  "ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி,  என்னடா பண்றதுனு இருந்த நல்ல வேலைய நீ வந்த,  சரி கவிமா நீ மேல போய் படுன்னு சொல்லிட்டு கருணாகரன் மெதுவா சாய்ந்தார். கார்த்தி மொபைல் ல பாட்டு கேட்டுட்டு உக்காந்துட்டு இருக்க,  கவி மெதுவா, " கார்த்தி நீங்க படுக்கைலாயா ? "
  "இல்ல கவி எனக்கு லேட் ஆகும் சோ நீ போய் படுன்னு சொல்லிட்டு காதுல மாட்டிட்டு பாட்டை கேக்க ஆரம்பிச்சுட்டான் கார்த்தி. கவி மெதுவாக மேல ஏறி படுக்கை சரி பன்னி படுத்து செல்போனை பார்க்க ஆரம்பித்தாள்.
  கவியோட பிரண்ட் அருணாவுக்கு வாட்ஸாப்ப் பன்ன ஆரம்பித்தாள் கவி. " ஹே! அருணா உனக்கு தெரியும செம ஸ்மார்ட் ஆஹ் எனக்கு ஒரு மாமா பையன் இருக்கான் டி,  அவ பேரு கார்த்தி :) "
  "இது என்னடி திடீர் மாமா பையன் எங்களுக்கு தெரியாம அதுவும் ஸ்மார்ட் ஆஹ்?? "
  " எனக்கே இன்னைக்கு தான் டி தெரிஞ்சுது அவனோட காலேஜ் ல தான் நாளைக்கு கொன்சிலிங்" ன்னு சொல்லி மொத்த கதய சொல்லி முடித்தா கவி
  " சூப்பர் கவி என்ஜோய்,  சரி டி எனக்கு தூக்கம் வருது நா போய் தூங்குற பாய் " அருணா தனது மெசேஜ் நிறுத்தி தூங்க சென்றால். கவியும் அப்படியே கண்களை மூடி நாளைக்கு நடக்க போவதை நினைத்து தூங்கி போனால்..
   மறுநாள் காலை 4 மணிக்கு ரயில் சென்னை வந்தது. கார்த்தி  கருணாகரனை எழுப்பினான் " மாமா சென்னை வந்துருச்சு எழுந்துரிங்க "
   "வந்துடுச்சா நல்லா தூங்கிட்டேன் மாப்பல  " மெதுவாக எழுந்து தன் நிலையை சுதாகரித்து கவியை எழுப்பினார் கருணாகரன். மெதுவா நெளிந்து அசைந்து எழுந்த கவி கார்த்தியை பார்த்ததும் ஆடை,  முகம்,  முடி அனைத்தையும் சரு சரவென சரி செய்தால். ஒரு விளையாட்டு சிரிப்போடு கார்த்தி தலை குனிந்தவனாய் வெளியே சென்றான்.கவி தன் தலையில் தட்டி ஒரு குழந்தை சிரிப்பு சிரித்தாள். கருணாகரன் கவிமா டைம் ஆகுது எழுந்து வானு சொல்லி வெளியே செல்ல கவி எழுந்து கீழே வந்தால்.
   "சரி கார்த்தி நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம்"
   " சரிங்க மாமா எங்க தங்க போறீங்க? "
   "இனி தா ஏதாச்சும் ஹோட்டல் பாக்கணும் கார்த்தி,  குளிச்சுட்டு ரெடி ஆகணும்ல "
   " உங்களுக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லனா என்னோட ரூம்க்கு வாங்க  மாமா " பொண்ண எப்படி அங்க கூட்டிட்டு போகனு கருணாகரன் யோசிப்பதை புரிந்து கொண்ட  கார்த்தி,
   " மாமா,  நாங்க பசங்க மட்டும் இல்ல எங்க கூட  என்னோட பிரண்ட் அம்மாவும் இருகாங்க அதா கூப்பிடுற ஒரு நாளைக்கு ஏன்  ரூம்  போடணும் " கருணாகரன் காவிய பாக்க கவி சரிங்கிற மாதிரி தலையை ஆட்ட மூவரும் ஆட்டோ எடுத்து கார்த்தியின் வீட்டுக்கு சேர்ந்தார்கள்.
   " உள்ள வாங்க மாமா,  வா கவி ! அம்மா என்றவாறு உள்ளே சென்றான் கார்த்தி. ஒரு சின்ன அறிமுகத்தோடு ஒரு சின்ன உபசரிப்பும் நடக்க,  " மாமா நீங்க எங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க கவி அம்மா கூட இருக்கட்டும் "
   "சரிப்பா,  கவி போமா ஒரு 7 மணிக்கு கிளம்பலாம்"
   "சரிப்பா,  ஆண்ட்டி ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு "
  வாமனு கூட்டிட்டு போய் விட எல்லாம் முடிந்ததும் கவி அன்னத்தின் ரூம்க்கு சென்றால். கவியின் மனதில் ஏதோ ஒரு குழப்பம் அது குழப்பமா மாற்றமா என்று புரியாத ஒரு உணர்வு. அவளுக்கு அவளே பேசிக்கொண்டாள் " கார்த்தியை பார்த்த ஏன் ஒரு மாதிரி இருக்கு இது சரியா தப்பா?  இப்போ நான் என்ன செய்யணும் அவன் கூட பேசலாமா வேண்டாமா? இது வரைக்கும் இந்த மாதிரி இருந்தது இல்லையே ! கடவுளே ஏன் எனக்கு என்ன ஆச்சு?  எதுக்கும் அவ கிட்ட இருந்து ஒரு அடி தள்ளியே இருப்போம் "  என்று புலம்பிகொண்டே படுத்திருந்தாள்.
  சிறிது நேரம் கழித்து கார்த்தி வந்து, " கவி டைம் ஆகுது ரெடி ஆகுங்க,  மாமா என்னோட ரூம்ல ரெடி ஆயிட்டு இருகாங்க நீயும் ரெடி ஆயிட்டா காலேஜ் போலாம்"
  "ஓகே,  10 மினிட்ஸ் நா ரெடி ஆயிடுற " சரி என்றவாறு தலையை ஆட்டிட்டு வெளியே சென்றான் கார்த்தி. அன்னம் காலை உணவை தயார் செய்ய காலை உணவை முடித்து மூவரும் காலேஜ் சென்றார்கள். கவுன்சிலிங் போக தேவையான எல்லம் ரெடி பன்னி குடுத்து "மாமா எனக்கு இப்போ கிளாஸ் இருக்கு நா போய்ட்டு திரும்ப வரேன், உங்க போன் நம்பர் குடுங்க நான் வந்து கால் பன்றேன்" சரிப்பானு நம்பரை குடுத்து ஒரு ரிங் குடுக்க சொன்ன போதுதான் தெரிந்தது கருணாகரன் போன் ரூம்லயே மறந்து வெச்சுட்டது. "கார்த்தி போன ரூம் லேயே மறந்துடம்ப கவி நம்பர் நோட் பண்ணிக்கோ" நம்பரை நோட் பன்னி ரிங் குடுத்து செக் பன்னிட்டு கார்த்தி கிளாஸ்க்கு போனான். கவியும்,  கருணாகரனும் அவர்களின் டோக்கன்காக காத்திருந்தார்கள்.
  அவர்களுக்கான டோக்கன் வந்ததும் உள்ளே சென்று காலேஜ் செலெக்ஷன் லிஸ்ட் பாத்துட்டு கருணாகரன் ஊரு சைடுல இருக்க காலேஜ் எடுமா அப்போதா வீட்ல இருந்து போக முடியும்னு சொல்லி எல்லாம் முடித்து அட்மிஷன் போட்டு வெளிய வந்தார்கள். அவர்கள் வரவும் கார்த்தி லஞ்ச் பிரேக்ல வரவும் சரியா இருக்க காலேஜ் கேன்டீன்ல கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி குடுத்து அவர்களை ரூம்க்கு அனுப்பினான்." மாமா நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க ஈவினிங் நான் வந்து ஸ்டேஷன் கூட்டிட்டு போறேன்"
  "சரி கார்த்தி " இருவரும் ஆட்டோ ஏறிய பிறகு கிளாஸ்க்கு வந்தான் கார்த்தி. கார்த்தியின் பிரண்ட் விக்ரம் "என்னடா! உன்னோட ஆளு எந்த காலேஜ் எடுத்திருக்க? "  என்று கேக்க அட அத கேக்க மறந்துட்டேன் டானு சோகமா முகத்தை மாற்றிக்கொண்டான் கார்த்தி. விக்ரம்,  " டேய் அதுக்கு எதுக்கு டா பீல் பன்ற ஈவினிங் கேட்ட போச்சு "
  "இல்லட மச்சா அவளுக்கு என்ன தெரியலடா,  என்கிட்ட சரியா கூட பேச மாற்ற ரொம்ப கஷ்டமா இருக்குடா. ஈவினிங் வரவே கூடாதுனு இருக்கு இல்லனா அவ கெளம்பிடுவல்ல "
  "டேய் இது உனக்கே டூ மச் ஆஹ் இல்லையா?  நீ என்னமோ அவ கிட்ட லவ் ஆஹ் சொல்லி பல வருஷம் லவ் பன்னி அவ உன்ன கண்டுக்காத மாதிரி பேசிட்டு இருக்க ! தம்பி நீயே அவளை நேத்துதா பாத்துருக்க ஞாபகம் இருக்கட்டும். ஆன செமயானா ஆளு தா நீ கவி நம்பர் வாங்க அவுங்க அப்பா போன் சார்ஜ் போடுரேன்னு மறச்சு வெச்சு அவர் எடுத்துட்டு வராத மாதிரி பன்னி போன் நம்பர் வாங்கிட்ட" ஒரு அசட்டு சிரிப்போட கிளாஸ் கவனிக்க ஆரம்பித்தான் கார்த்தி. ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும்,  " மாமா எந்த காலேஜ் எடுத்தீங்க கேக்க மறந்துட்டா? " மாமாவிடம் பேசினாலும் கார்த்தியின் கண்கள் கவியின் மேல் விழுந்தது.
  " நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குலப லிஸ் இன்ஜினியரிங் காலேஜ் அதுதா "
  " ஏன்  மாமா கவி நல்ல மார்க் தான சென்னைலேயே நிறைய காலேஜ் இருக்கே அது ஏன் எடுத்தீங்க? "
  "அது தா கார்த்தி வீட்ல இருந்து போக முடியும்,  பொண்ண இவ்ளோ தூரம் அனுப்பி படிக்க வைக்குறது எல்லாம் கஷ்டம்ப "
  "சரி சரி,  எத்தனை மணிக்கு ரயில் மாமா? "
  " நைட் 7 மணிக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பின கரெக்ட் ஆஹ் இருக்கும் "
  "சரி மாமா " கார்த்தியின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி ,  அவன் கண்களில் சின்ன நீர் துளி, என்னை யார் என்று அறியாமல் செல்கிறாயே என்று. ஆனால் கவி அவளை கட்டு படுத்தி அவனை பார்க்காமல் புறக்கணித்தால். ஆனால் அவள் மனது ஏனோ அவனை பார் பார் என்றது,  அவளின் மனதுக்கும் அறிவுக்கும் ஒரு போராட்டமே நடக்க அறிவே வென்றது.
  கடிகாரத்தின் முள் 6 தொட கருணாகரனும் கவியும் கிளம்ப தயாராகினர். "சரி கார்த்தி நாங்க கெளம்புறோம் !"
  " நான் வர மாமா ஸ்டேஷன் ல வந்து விட்டுட்டு வர "
  "உனக்கு எதுக்கு சிரமம் நாங்க  போய்க்கிறோம்,  நேத்துல இருந்து எல்லாம் பாத்து பாத்து பன்னி குடுத்த இன்னும் உன்ன சிரம படுத்த வேணம்ல "
  "இதுல என்ன சிரமம் மாமா நான் வர வாங்க !" கார்த்தியும் விகரமும் பைக்கில் கிளம்ப எதுவும் சொல்ல முடியாமல் கருணாகரன் அமைதி ஆனார்.
  பைக்கில் வரும் வழியில் கார்த்தி, " மச்சி அவ என்ன பாக்கவே மாற்ற டா பேசாம பாய் சொல்லாம போய்டுவாளோ?  எனக்கு பயமா இருக்கு டா "
  "டேய் பொலம்பாம வா டா அது எல்லாம் ஒன்னும் ஆகாது " ஸ்டேஷன் வந்ததும் கருணாகரனிடம், " பாக் குடுங்க மாமா நான் தூக்கிக்கிறேன் "
  "இல்லப்பா வேண்டாம் " அட குடுங்கன்னு வாங்கி கொண்டான் கார்த்தி.ரயில் தயார் நிலையில் இருக்க சீட் நம்பர் செக் பன்னி உள்ளே போக,  ஜன்னல் வழியாக கார்த்தி கவியை பார்த்த படி நின்றான். அவன் தனக்காக நிற்பதை உணர்ந்த கவி தன்னை பலமாக கட்டுக்குள் வைக்க முயற்சித்தால். ரயில் கிளம்ப போகிறேன் என சத்தம் குடுக்க,  கார்த்தியின் முகத்தில் தவிப்பு அதிகம் ஆக அவனது இதய துடிப்பு காதில் கேக்க ஆரம்பித்தது. ரயில் மெதுவாக நகர தொடங்க கருணாகரன் கை அசைத்து விடை பெற்றார்  கார்த்தியிடம். ரயிலின் நகர்விட்கு தகுந்தாற் போல கார்த்தியும் ஜன்னலை பிடித்து நகர ஆரம்பித்தான். கவியின் மனதில் ஒரு மௌன போராட்டம் நடக்க கடைசில் மனதே வென்றது. கார்த்தியை பார்த்து சின்ன சிரிப்போடு தலையை அசைக்க,  உலகமே அவன் காலடியில் விழுந்தவனாய் துள்ளி குதித்தான். விக்கரம் முதுகில் ஏறி குதித்தான் அவனை அடித்தான்,  சந்தோஷத்தில் செய்வது அறியாமல் ஓடினான்........

Comments

Popular posts from this blog

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Tamil kavithai about pregnancy - தாய்மை