Posts

Showing posts from November, 2019

Motivational tamil kavithai, Tamil kavithai about life struggle -, முயன்று வா !!

Image
முயன்று வா !! முற்பாதை என்று முன்னேற  நீ மறுத்தால்,   முதுகிலா உன்வெற்றி தேடுவாய்?   முயன்று வா !! பரிகாசம் கேட்டு பயந்து  நீ போனால்,  வெற்றியின் பாதை தெரிந்திடுமோ??  முயன்று வா !! வீழ்ந்தேன் என விசும்பி  நீ அழுதால்,  வீரனே உன் வீரம் உலகறியாது  முயன்று வா !! கஷ்டங்கள் பல  காலம் தான் தந்தாலும்,  கரையேற முடியுமென்று  முயன்று வா!! தோல்விகள் பலவந்து  உன்னை துவட்டி போட்டாலும்,  வெற்றியின் தூரம் அதிகமில்லை  முயன்று வா !! என்னால் முடியுமென்று  முழுமூச்சாய் நீ முயன்றால்,  சூரியனும் உன் சுண்டுவிரலில் மறையும்  முயன்று வா தோழா ! முயன்று வா !!

Children's day kavithai - குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

Image
      இனியவராம் நேரு மாமா  இவ்வுலகில் வந்த நாளிது ! நம் நாட்டின் முதல் பிரதமர்  பிறந்த திருநாளிது ! ரோஜா பூ வைத்தவர்  பூமிக்கு வந்த நாளிது ! நாட்டுக்காக சிறைக்கு சென்ற  நல்லவர் பிறந்த நாளிது! நவம்பர் 14 ஆம் இந்நாளில்,  நாம் அனைவரும் ஒன்றுகூடி,  குழந்தைகளின் நாயகனாம்  நம்ம நேரு மாமாவை வணங்கி,  கொண்டாடுவோம் இந்த  குழந்தைகள் தினத்தை !! "இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்"

Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...

Image
அழகிய என் மகளே  அன்பாய் ஓர் கடிதம்,  கருவில் நீ வந்த,  காலம் முதலாக,  கனவும் நீயின்றி இல்லையடி ! கண்ணே உன் முதல் பார்வை,  என் கண்ணுக்குள்  நீங்காத காட்சியடி ! உன் மூச்சு எனை உரச,  நீ உண்ட முதல் பாலை,  முத்தமிழும் விளக்கிட இயலுமோடி ! உன் பிஞ்சு கைகோர்த்து,  நெஞ்சம் மகிழ்ந்த கதை,  நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி ! அம்மா என்றழைத்து,  அழகாய் சிரிக்கையிலே,  அகிலமும் சிறிதாகி போனதடி ! உன் செயலை நான் பார்த்து,  அதில் என் செயலும் தெரிகையிலே,  என் தாயின் உணர்வுகளும் புரியுதடி! சின்ன குழந்தையென உன்னை பார்க்கையிலே,  சீரான உன் பேச்சு,  என்னை கொஞ்சம் அசத்துதடி ! சோர்ந்து நான் படுத்து, இயலாமல் நானிருந்தால்,  உன்மடியில் எனைத்தாழ்த்தி நீகாட்டும் அரவணைப்பில்,  நீயும் என் தாய்யென்று தோணுதடி ! எப்பிறவி எக்காலம் நான் செய்ததவமோ?  எஞ்சாமி நீ வந்தாய்  என்வாழ்வின் வரமாய் ! இன்னொரு பிறவி எனக்கிருந்தால்  என் உயிரே...

Hykoo kavithai about calmness - பொறுமை

Image
ஆயிரம் கேள்வி அடிமனதில் தோன்றும்,  அப்படியே கேட்டு விட  அறிவும் அறிவுரைகூறும்,  ஆனால்,  அத்தனையும் மாறும் என்ற அமைதியான காத்திருப்பு  " பொறுமை "

Tamil kavithai about love - காதல்

Image
கண்களில் தோன்றி,  மூச்சினுள் நுழைந்து,  இதயத்தில் இடம்பிடித்து, வார்த்தைகளை மௌனமாக்கி,  உயிரினுள் கலந்த  ஒரு உன்னத உணர்வு    " காதல் "