Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...
அன்பாய் ஓர் கடிதம்,
கருவில் நீ வந்த,
காலம் முதலாக,
கனவும் நீயின்றி இல்லையடி !
கண்ணே உன் முதல் பார்வை,
என் கண்ணுக்குள்
நீங்காத காட்சியடி !
உன் மூச்சு எனை உரச,
நீ உண்ட முதல் பாலை,
முத்தமிழும் விளக்கிட இயலுமோடி !
உன் பிஞ்சு கைகோர்த்து,
நெஞ்சம் மகிழ்ந்த கதை,
நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி !
அம்மா என்றழைத்து,
அழகாய் சிரிக்கையிலே,
அகிலமும் சிறிதாகி போனதடி !
உன் செயலை நான் பார்த்து,
அதில் என் செயலும் தெரிகையிலே,
என் தாயின் உணர்வுகளும் புரியுதடி!
சின்ன குழந்தையென உன்னை பார்க்கையிலே,
சீரான உன் பேச்சு,
என்னை கொஞ்சம் அசத்துதடி !
சோர்ந்து நான் படுத்து, இயலாமல் நானிருந்தால்,
உன்மடியில் எனைத்தாழ்த்தி நீகாட்டும் அரவணைப்பில்,
நீயும் என் தாய்யென்று தோணுதடி !
எப்பிறவி எக்காலம் நான் செய்ததவமோ?
எஞ்சாமி நீ வந்தாய்
என்வாழ்வின் வரமாய் !
இன்னொரு பிறவி எனக்கிருந்தால்
என் உயிரே
நீயே மகளாக வேணுமடி !!
... என்றும் அன்புடன் அம்மா
No words to say...suberb and heart touching lines...
ReplyDeleteThank you 🙏
DeleteSuper
ReplyDelete