Motivational tamil kavithai, Tamil kavithai about life struggle -, முயன்று வா !!
முயன்று வா !!
முற்பாதை என்று முன்னேற
நீ மறுத்தால்,
முதுகிலா உன்வெற்றி தேடுவாய்?
முயன்று வா !!
பரிகாசம் கேட்டு பயந்து
நீ போனால்,
வெற்றியின் பாதை தெரிந்திடுமோ??
முயன்று வா !!
வீழ்ந்தேன் என விசும்பி
நீ அழுதால்,
வீரனே உன் வீரம் உலகறியாது
முயன்று வா !!
கஷ்டங்கள் பல
காலம் தான் தந்தாலும்,
கரையேற முடியுமென்று
முயன்று வா!!
தோல்விகள் பலவந்து
உன்னை துவட்டி போட்டாலும்,
வெற்றியின் தூரம் அதிகமில்லை
முயன்று வா !!
என்னால் முடியுமென்று
முழுமூச்சாய் நீ முயன்றால்,
சூரியனும் உன் சுண்டுவிரலில் மறையும்
முயன்று வா தோழா !
முயன்று வா !!
Comments
Post a Comment