Tamil kavithai about corona, Corona kavithai - கொரோனா
சீனாக்காரன் கண்டெடுத்து
சீமை தாண்டி வந்தவனோ !!
தொண்டைல தான் புகுந்து
தொந்தரவு செய்பவனோ !!
நீ வந்த நாள் முதலே எஞ்சனம்
நித்தமும் சாகுதடா !!
காத்துல நீ இருந்தா
காணாம ஆக்கிருப்போம் !!
தண்ணில நீ இருந்தா
தடம் தெரியாம தடுத்துருப்போம்!!
ஆன நீயோ,
எம்மக்க உடம்புக்குள்ள
ஒளிஞ்சு நின்னு தாக்குறியே !!
வீரம் விளைஞ்ச மண்ணில்
விட்டுடுவோமா உனை வாழ !!
காலம் கசிந்ததுடா
காலனே உனை விரட்ட !!
வீட்டுக்குள்ள தானிருந்து
விரட்டிடுவோம் உனைத்தானே !!
கை காலை தான் கழுவி
கருவருப்போம் உனைத்தானே !!
கொலைகார கொரோனாவே
கொய்ந்தெடுப்போம் உனைத்தானே !!
Comments
Post a Comment