Tamil kavithai about pregnancy - தாய்மை
நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து
நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி
சொன்ன நாள் முதல் தொடங்கியது
தாய்மையின் முதல் அத்தியாயம் !
மசக்கையின் மந்திரத்தில்
மாற்றங்கள் எனக்குவர
மன்னவன் தோல் சாய்ந்து
மயக்கம் வருகுதென்றேன் !
தூயவளே துயர் வேண்டாம்,
நம் குழந்தை நீ சும்மக்க
என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன்
துணிந்து வா என்னோடு என்றுரைத்தான் !
வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே
வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம்,
என் மகளே, மாதராய் பிறந்திட்டால்
மணிமுத்தை பெற்றெடுக்க
ஈரைந்து மாதங்கள்
இவையனைத்தும் வருமென்று
பக்குவமாய் எடுத்துரைத்தாள் !
பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக
பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக
அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க
முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது !
பிறர் சொல்லி கேட்டறிந்தேன்
காட்சியாக பாத்திருந்தேன்
மனதார நானுணர்ந்து
மகிழ்ந்து திளைத்திருந்தேன் உன் அசைவில் !
என் வயிறும் வளர்ந்திருக்க
வாட்டமும் குறைந்திருக்க
வசமாய் வளைந்து போனது
இரண்டாம் மூன்று மாதமும் !
நீ வரும் நாளை நித்தமும் எதிர்நோக்கி
நித்திரையும் நினைவாகி போனதே,
உயிர் போகும் வலி என்றறிந்தும்
உனக்காக எதிர் கொள்ள துணிந்தேன்
என் கண்மணியே !
அம்மா அம்மா என்று பலமுறை நான் அலற
அழகாக நீ வந்தாய் என்னை
அம்மா என்றழைக்க
என் பூங்குயிலே !!
No words to say...suberb and heart touching lines...
ReplyDeleteThankyou🙏🏻
Delete