Tamil kavithai about brother sister love, brother sister bonding - என் அண்ணன்
அம்மாவின் அடிவயிற்றில்
அறிமுகமான
அன்பான சொந்தகார
ஆசையாய் ஒரு கடிதம்....
சின்ன சின்ன சண்டையிட்டு
சீரோடு வளர்ந்த கதை - நினைக்கும் போதெல்லாம்
சிந்தை இனிக்குதடா !!
தத்தி தத்தி நான் நடக்க
தாங்கி பிடித்த உனை
என் நடை
தளர்ந்த போதும் மறவேன்டா !!
அழகு அழகாய் என் பெயரை
எனக்கறிய சொல்லிக்குடுத்த
நீயும் என்
ஆசான் தானடா !!
எனைப்பற்றி நான் அறியா
விஷயத்தை என் அண்ணா
நீ அறிந்து நடக்கைலே
எச்சென்ம புன்னியமோனு தோணுதடா !!
தவறு நான் செய்ய
தவறாமல் கண்டிக்கும் - நீயும்
என் தந்தைதானடா !!
எப்பிறவி எச்சென்மம்
நான் செய்த தவமோ !!
நீ என் அண்ணன்
என வந்தாயடா !!
மறுபிறவி மறுசென்மம்
எனக்கிருந்தால்
மறவாமல் நீயே வரவேண்டும்
என் அண்ணன்னாய் !!
-என்றும் உன் அன்பு தங்கை
Comments
Post a Comment