Tamil kavithai for daughter, daughter's love - மகளுக்கோர் கடிதம்...
அழகிய என் மகளே அன்பாய் ஓர் கடிதம், கருவில் நீ வந்த, காலம் முதலாக, கனவும் நீயின்றி இல்லையடி ! கண்ணே உன் முதல் பார்வை, என் கண்ணுக்குள் நீங்காத காட்சியடி ! உன் மூச்சு எனை உரச, நீ உண்ட முதல் பாலை, முத்தமிழும் விளக்கிட இயலுமோடி ! உன் பிஞ்சு கைகோர்த்து, நெஞ்சம் மகிழ்ந்த கதை, நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி ! அம்மா என்றழைத்து, அழகாய் சிரிக்கையிலே, அகிலமும் சிறிதாகி போனதடி ! உன் செயலை நான் பார்த்து, அதில் என் செயலும் தெரிகையிலே, என் தாயின் உணர்வுகளும் புரியுதடி! சின்ன குழந்தையென உன்னை பார்க்கையிலே, சீரான உன் பேச்சு, என்னை கொஞ்சம் அசத்துதடி ! சோர்ந்து நான் படுத்து, இயலாமல் நானிருந்தால், உன்மடியில் எனைத்தாழ்த்தி நீகாட்டும் அரவணைப்பில், நீயும் என் தாய்யென்று தோணுதடி ! எப்பிறவி எக்காலம் நான் செய்ததவமோ? எஞ்சாமி நீ வந்தாய் என்வாழ்வின் வரமாய் ! இன்னொரு பிறவி எனக்கிருந்தால் என் உயிரே...
Comments
Post a Comment