Tamil kavithai for husband who lives in abroad - காதல் ஏக்கம்
நாட்டை விட்டு நாடு சென்ற நாயகனே
நாளும் நான் படும் வேதனை அறிவாயோ?
நாளும் நகரவில்லை
நல்ல சோறு இரங்கவில்லை !
நித்தமும் உன் நினைவில்
நித்திரையும் வரவில்லை !
உறவுகள் சூழ்ந்திருந்தும்
உற்ற துணை யாருமில்லை !
நாள் பொழுது பார்க்கவில்லை
நாட்டமும் எதிலுமில்லை !
கைபேசி தனிலே கண்ணா,
உன் முகம் பார்க்கும்
கணநேரம் கறையுதடா என் கவலை!
நெஞ்சிலே நினைவை சுமந்து
கண்ணீரில் காலம் கடத்தி
காதலே காத்திருக்கிறேன் உனக்காக !
காலமும் கடத்தாமல்
கடமை தானுணர்ந்து
கடல் தாண்டி வாராயோ எந்தன் கண்ணாளனே !!
Comments
Post a Comment