Tamil kavithai about school, #my school - பள்ளிக்கூடம்
பசுமையான நினைவுகளை
அள்ளித்தரும் அக்ஷ்யபாத்திரம்,
அழுகை, சிரிப்பு, போட்டி, நம்பிக்கை, முயற்சி
அனைத்துக்குமான ஆரம்பக்கோடு,
நட்போடு பழகிய நண்பர்கள் கூட்டம்,
அதட்டி அறிவுரை சொன்ன அன்பான ஆசிரியர்கள்,
புத்தகத்துக்கு நடுவிலே குட்டி போடும் மையிலிறகு,
தேர்வுக்கு துணைக்குவந்த ஆஞ்சநேயர் படம்,
ஒற்றை மரத்தடி நிழலில்
ஓராயிரம் கதைகள்,
மணியான மணியோசை,
மாற்றி உண்ட மதியஉணவு,
சின்ன சின்ன சேட்டை,
சிரித்து மகிழ்ந்த நாட்கள்,
அத்தனையும் எதிரொலிக்கும்
அழகிய சின்ன சொர்க்கம்
"பள்ளிக்கூடம் "
Comments
Post a Comment