Tamil kavithai about Moon, Nila, Nilavu - நிலா
அழகின் ஆதாரமே
ஆச்சர்யத்தின் அமைவிடமே !
இருட்டின் வெளிச்சமாய்
நம்பிக்கை நட்சத்திரமே !
மேகமே உன்னை மறைத்தாலும்
மீண்டு வரும் போராட்டமே !
கரைந்தே போனாலும்
விரைந்து வரும் வினோதமே !
உன் மீது கரையிருந்தும்
குறைவில்லா ஒளி தரும் ஓவியமே !
குழந்தைக்கு குழந்தையாய்
அமுதூட்ட அசைந்து வரும் அழகுப்பெட்டகமே!
உன்னை வர்ணிக்க என்வரிகள்
போதவில்லை வெள்ளி நிலவே !!
அழகான நிலா கவிதைகளை வரிகளை படிக்க 👇
ReplyDeleteNila kavithai in tamil