Posts

Showing posts from October, 2019

Tamil kavithai about school, #my school - பள்ளிக்கூடம்

Image
பசுமையான நினைவுகளை அள்ளித்தரும் அக்ஷ்யபாத்திரம், அழுகை, சிரிப்பு, போட்டி, நம்பிக்கை, முயற்சி அனைத்துக்குமான ஆரம்பக்கோடு, நட்போடு பழகிய நண்பர்கள் கூட்டம், அதட்டி அறிவுரை சொன்ன அன்பான ஆசிரியர்கள், புத்தகத்துக்கு நடுவிலே குட்டி போடும் மையிலிறகு, தேர்வுக்கு துணைக்குவந்த ஆஞ்சநேயர் படம், ஒற்றை மரத்தடி நிழலில் ஓராயிரம் கதைகள், மணியான மணியோசை, மாற்றி உண்ட மதியஉணவு, சின்ன சின்ன சேட்டை, சிரித்து மகிழ்ந்த நாட்கள், அத்தனையும் எதிரொலிக்கும் அழகிய சின்ன சொர்க்கம்     "பள்ளிக்கூடம் "

#Happy Diwali - தீபாவளி வாழ்த்துக்கள்

Image

Diwali wishes - தீபாவளி வாழ்த்துக்கள்

Image

Tamil kavithai about Moon, Nila, Nilavu - நிலா

Image
அழகின் ஆதாரமே  ஆச்சர்யத்தின் அமைவிடமே ! இருட்டின் வெளிச்சமாய்  நம்பிக்கை நட்சத்திரமே ! மேகமே உன்னை மறைத்தாலும்  மீண்டு வரும் போராட்டமே ! கரைந்தே போனாலும்  விரைந்து வரும் வினோதமே ! உன் மீது கரையிருந்தும்  குறைவில்லா ஒளி தரும் ஓவியமே ! குழந்தைக்கு குழந்தையாய்  அமுதூட்ட அசைந்து வரும் அழகுப்பெட்டகமே! உன்னை வர்ணிக்க என்வரிகள்  போதவில்லை வெள்ளி நிலவே !!

Tamil kavithai for husband who lives in abroad - காதல் ஏக்கம்

Image
நாட்டை விட்டு நாடு சென்ற நாயகனே  நாளும் நான் படும் வேதனை அறிவாயோ?   நாளும் நகரவில்லை   நல்ல சோறு இரங்கவில்லை ! நித்தமும் உன் நினைவில்  நித்திரையும் வரவில்லை ! உறவுகள் சூழ்ந்திருந்தும்  உற்ற துணை யாருமில்லை ! நாள் பொழுது பார்க்கவில்லை  நாட்டமும் எதிலுமில்லை ! கைபேசி தனிலே கண்ணா,  உன் முகம் பார்க்கும்  கணநேரம் கறையுதடா என் கவலை! நெஞ்சிலே நினைவை சுமந்து  கண்ணீரில் காலம் கடத்தி  காதலே காத்திருக்கிறேன் உனக்காக ! காலமும் கடத்தாமல்  கடமை தானுணர்ந்து  கடல் தாண்டி வாராயோ எந்தன் கண்ணாளனே !!