Posts

Showing posts from July, 2019

Tamil kavithai about pregnancy - தாய்மை

Image
நாயகன் கைகோர்த்து நாளொரு தவமிருந்து  நாட்கள் தள்ளி நல்லதொரு சேதி  சொன்ன  நாள் முதல் தொடங்கியது  தாய்மையின் முதல் அத்தியாயம் ! மசக்கையின் மந்திரத்தில்  மாற்றங்கள் எனக்குவர  மன்னவன் தோல் சாய்ந்து  மயக்கம் வருகுதென்றேன் ! தூயவளே துயர் வேண்டாம்,  நம் குழந்தை நீ சும்மக்க  என் குழந்தையாய் உன்னை நான் சுமக்கிறேன்  துணிந்து வா என்னோடு என்றுரைத்தான் ! வாந்தியும் சோர்வும் வாட்டி வதக்கையிலே  வசமிழந்து வந்து நின்றேன் என் தாயிடம்,  என் மகளே,  மாதராய் பிறந்திட்டால்  மணிமுத்தை பெற்றெடுக்க  ஈரைந்து மாதங்கள் இவையனைத்தும் வருமென்று  பக்குவமாய் எடுத்துரைத்தாள் ! பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போக  பிடிக்காததெல்லாம் பிடித்துப்போக  அவையனைத்தையும் சுவைத்து தீர்க்க  முதல் மூன்று மாதமும் முறையாய் முடிந்தது ! பிறர் சொல்லி கேட்டறிந்தேன்  காட்சியாக பாத்திருந்தேன்  மனதார நானுணர்ந்து  மகிழ்ந்து திளைத்திருந்தேன் உன் அசைவில் ! என் வயிறும் ...